அரசியல் » மாநில அரசு கூலிப்படையா..? டிசம்பர் 30,2018 16:00 IST
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி தொகுதி தி.மு.க.,செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்படத்தில் நடந்தது. கடலுார் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அப்பாவு பங்கேற்று பேசுகையில், மத்திய அரசு சொல்வதைத்தான் தமிழக அரசு செய்கிறது. தமிழக அரசே கூலிப்படை போல செயல்படுகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் வாயிலேயே சுட்டுக்கொன்றார்கள். அதற்காக மோடி இதுவரை அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. மத்திய அரசு சொன்னதும், மாநில அரசு கூலிப்படையா சுட்டு குவிக்க..? இதுதான் இன்றைய ஆட்சி நிலவரம் எனப்பேசினார்.
வாசகர் கருத்து