பொது » கேரளாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது ஜனவரி 02,2019 15:00 IST
சபரிமலையில் 40+ வயதான 2 பெண்களை போலீசார் தடாலடியாக கோயிலுக்குள் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்ததை அடுத்து கேரளாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை செய்தபின் திறக்கப்பட்டது. பெண்கள் நுழைந்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம், வன்முறை நடந்தது. அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன; வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தலைமை செயலகம் முன்பு பா ஜ , மார்க்சிஸ்ட் தொண்டர்கள் பலமாக மோதிக் கொண்டனர். வியாழனன்று கேரளா முழுவதும் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். பினராயி விஜயன் அரசு விலக வேண்டும் என பா ஜ, காங்கிரஸ் கட்சிகள் கூறுகின்றன.
வாசகர் கருத்து