சம்பவம் » மீனவர்களின் வலைகளைப் பறித்து சென்ற இலங்கை மீனவர்கள் ஜனவரி 03,2019 19:30 IST
நாகப்பட்டினம், கோடியக்கரையில் மீன்பிடி சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெருமாள் பேட்டையைச் சேர்ந்த ஞானவேல், வீரமணி, பிரகாஷ், ஜெயகுமார் ஆகியோர் புதனன்று மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் இவர்களின் படகை சூழ்ந்து கொண்டு அவர்கள் மீன்பிடிக்க விரித்திருந்த 3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை பறித்து சென்றனர். மீன்பிடி வலைகளை இழந்த நிலையில் பெருமாள்பேட்டை மீனவர்கள் கோடியக்கரை திரும்பினர். மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து