பொது » அவனியாபுரம் ஜல்லிகட்டு அமைதி முக்கியம் ஜனவரி 04,2019 00:00 IST
மதுரை மாவட்டத்தில் முதல் ஜல்லிகட்டு போட்டி அவனியாபுரத்தில் ஜன. 15ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அரசாணை பிறப்பித்த நிலையில், அவனியாபுரத்தில் இருபிரிவினரிடையே ஜல்லிகட்டு போட்டி நடத்துவது தொடர்பாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெக்தீஷ் சந்திரா , ஜல்லிகட்டு விழா குழுவின் தலைவராக கலெக்டர் நடராஜன் செயல்பட்டு, அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து நடத்தலாமே என கருத்து தெரிவித்தார். ஜல்லிகட்டு விழாவை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் உத்தரவிட்டு வழக்கை ஜன. 7 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
வாசகர் கருத்து