பொது » கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை ஜனவரி 04,2019 00:00 IST
அரியலூர் பேருந்து நிலையம் அருகே செட்டி ஏரிக்கரையில் உள்ளது சக்தி விநாயகர் கோயில். இங்குள்ள நந்திக்கு வெள்ளியன்று பிரதோஷ சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களின் காணிக்கையால் உண்டியல் நிரம்பியிருந்த போது, நள்ளிரவில் கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து, உள்ளே இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். கோயிலின் எதிரே அண்ணாசிலை அருகில் உள்ள CCTV கேமரா பதிவினை கொண்டு கொள்ளையர்களை தேடும் பணியில் அரியலூர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து