விளையாட்டு » மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் ஜனவரி 04,2019 15:00 IST
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான நீச்சல் போட்டிகளை கலெக்டர் சுரேஷ்குமார் இன்று காலை தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் 14, 17, 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என 3 பிரிவுகளில், சென்னை, கோவை, நெல்லை,மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 32 மாவட்டங்களைச் சேர்ந்த 2000 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிகளில் முதலிடம் பிடிப்போர் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
வாசகர் கருத்து