ஆன்மிகம் வீடியோ » 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு ஜனவரி 05,2019 00:00 IST
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகமும் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் மல்லி,பிச்சி, சம்பங்கி பூக்களால் ஆன மஹா புஷ்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஒரு லட்சம் லட்டுகளும் தயாரிக்கப்பட்டன.
வாசகர் கருத்து