விளையாட்டு » பெண்கள் கைப்பந்து: தமிழகம் வெற்றி ஜனவரி 05,2019 15:30 IST
தேசிய கைப்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. பெண்களுக்கான லீக் போட்டியில் தமிழக அணி 3-0 என்ற செட் கணக்கில் அரியானாவை வீழ்த்தியது. ரயில்வே அணி மேற்கு வங்கத்தை 3-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. ஆண்களுக்கான லீக் போட்டியில் தமிழக கர்நாடக அணிகள் மோதின. மூன்றுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் கர்நாடகா வென்றது. ரயில்வே அணி 3க்கு 2 என்ற செட் கணக்கில் ஹரியானாவையும், சர்வீசஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் ஆந்திர அணியையும் வீழ்த்தின.
வாசகர் கருத்து