பொது » எம்.பி. எம்.எல்.ஏ வீடு மீது குண்டுவீச்சு ஜனவரி 05,2019 17:40 IST
50 வயது நிரம்பாத 2 பெண்கள் சபரிமலையில் நுழைந்ததால் கேரளாவில் கலவரம் வெடித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா எம்.பி., முரளீதரன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு மர்ம ஆசாமிகள் தீவைத்தனர். இரு சம்பவங்களிலும் யாருக்கும் காயம் இல்லை. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஷம்சீ Shamsee நிர்வாகி சசி ஆகியோரது வீடுகளிலும் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. வன்முறை சம்பவங்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சியினரும் பாரதிய ஜனதா கட்சியினரும் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றனர். கலவரச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 1700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து