விளையாட்டு » கூடைப்பந்து: ரெனோவேட்டட் கிளப் வெற்றி ஜனவரி 05,2019 19:08 IST
மாவட்ட டெக்ஸிட்டி கூடைப்பந்து கிளப் சார்பில் 13ம் ஆண்டு 'தேவராஜூலு கோப்பை'க்கான சீனியர் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி , மாநகராட்சி கூடைப்பந்து கோர்ட்டில் துவங்கியது. 26 அணிகள் போட்டியில் பங்கேற்றன. சனியன்று நடந்த முதல் போட்டியில், ரெனோவேட்டட் கிளப் 84-42 புள்ளி கணக்கில், ஸ்டார் கூடைப்பந்து கிளப் அணியை வென்றது. ஸ்டெனைட் கிளப் 68-64 புள்ளி கணக்கில், கோல்டன் சிட்டி கிளப் அணியை வென்றது. ஸ்பைஸ் கிளப் 75-48 புள்ளி கணக்கில், பெர்க்ஸ் கிளப் அணியை வென்றது.
வாசகர் கருத்து