விளையாட்டு » தேசிய வாலிபால்: தமிழக அணிகள் தோல்வி ஜனவரி 06,2019 13:00 IST
சென்னை நேரு விளையாட்டரங்கில் தேசிய அளவிலான கைபந்து போட்டி நடந்தது. ஆண்கள் பிரிவில் 29 அணிகளும் பெண்கள் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரில் தமிழக அணியும், கேரளா அணியும் மோதின. இதில் கேரள அணி 3க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் ஹரியானா அணி, ஆந்திர அணியை 3க்கு 2 செட் கணக்கில் தோற்கடித்தது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியை ரயில்வே அணி, 3 க்கு 0 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. வரும் 10ம் தேதி இறுதி போட்டி நடக்கிறது.
வாசகர் கருத்து