சம்பவம் » லாரி மோதியதில் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் பலி ஜனவரி 06,2019 00:00 IST
தெலுங்கானா மாநிலம் மெதக் காஜிபேட் பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 16 பேர், வேனில் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தனர். வேனில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த கண்டெயினர் லாரி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த டிரைவர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். படுகாயமடைந்த 10 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 4 பேர் இறந்தனர். விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது. திருமயம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். விபத்து குறித்து கலெக்டர் கணேஷ், எஸ்.பி செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்க ஆந்திர அரசை தொடர்பு கொண்டு, கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். திருமயம் அரசு மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் கூறினார்.
வாசகர் கருத்து