சம்பவம் » லாக்கர் திறக்க முடியாததால் ஆவணங்களை எரித்த கொள்ளையர்கள் ஜனவரி 07,2019 00:00 IST
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அலுவலர்கள், காலை அலுவலகத்திற்கு வந்தபோது, பூட்டு மற்றும் ஜன்னல் பகுதி உடைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர். உள்ளே நகை மற்றும் பணப்பெட்டகத்தை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள், உடைக்க முடியாத ஆத்திரத்தில் ஆவணங்கள், கம்ப்யூட்டர்களை எரித்துச் சென்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து