விளையாட்டு » மாநில செஸ் தேர்வு போட்டி ஜனவரி 07,2019 00:00 IST
அரியலூர் மாவட்ட செஸ் கழகம் சார்பில் மாநிலப் போட்டிகளுக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு அரியலூரில் நடைபெற்றது. தேசிய நடுவர் பிரவீன் தலைமை நடுவராக பங்கேற்றார். 7 வயது பிரிவில் ஃபாரிஷ் அஸ்வந்த், சதிஷ்குமார், ப்ரின்ஸ் நிகித், வானதி, தனலட்சுமி, ஸ்வேதா காயத்ரி, ஆகியோர் தேர்வு பெற்றனர். 9 வயது ஆண்கள் பிரிவில் ஸ்ரீராம், தயாநித்யன், ஹரிஹரன், சுஜி, சிந்தியா, ப்ரீதிகா ஆகியோரும் 11 வயது பிரிவில் மதன்குமார், இனியபாலன், கனபதிராஜன், ராஜதர்ஷினி, லேகாஸ்ரீ, பிரியதர்ஷினி, ஆகியோர் தேர்வு பெற்றனர். 13 வயது பிரிவில் திலிபன்ராஜ், சூரியபிரகாஷ், ஆகாஷ், பிரியன்ஜனா, சினேகா ஆகியோரும் 15 வயது பிரிவில் லக்ஷ்மனன், ராகுல், சரத், தருன்யா, கௌரி, சிந்துஜா, ஆகியோர் தேர்வு பெற்றனர். 17 வயது பிரிவில் சூரியா, சண்முகராஜேஸ், மோகன்தாஸ், சர்மிளா, மனோபாலா, மகாசக்தி, ஆகியோரும் பொதுப்பிரிவில் ஆன்ஸ்லெம் பிலேவியன், காமராசு, விஜயபாஸ்கர் மற்றும் கார்த்திக்ராஜ் ஆகியோர் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வாசகர் கருத்து