பொது » ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு ஜி.ஆர்.பி., ஹெல்ப் ஆப் ஜனவரி 10,2019 12:00 IST
திருவண்ணாமலையில், ரயிலில் செல்லும் பயணிகளுக்கு, குற்ற சம்பவங்கள் மற்றும் தங்களுக்கான பாதுகாப்பு குறித்து புகார் அளிக்கும் வகையில் ஜி.ஆர்.பி., ெஹல்ப் ஆப்பை (GRP-help app) ரயில்வே ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சைலேந்திரபாபு, ஜி.ஆர்.பி., ெஹல்ப் கேர் என்ற ஒரு செயலியை பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களின் பெற்றோர் செல்போன்களில் ஆப்பை டவுன் லோடு செய்து பயன்படுத்த வேண்டும், ரயிலில் செல்லும்போது, பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்து வந்தாலும், ரயிலில் திருட்டு நடந்தாலும், செயலியில் தெரிவித்தால், அங்கேயே புகார்களை போலீசார் பெற்று கொள்வர் என்றார்.
வாசகர் கருத்து