சம்பவம் » கோயில் நில பிரச்சனையில் இருதரப்பினர் மோதல் ஜனவரி 10,2019 00:00 IST
காங்கேயத்தை அடுத்த ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில் நிலத்தில், தனியார் பால் நிறுவனம் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை நிறுத்தக் கோரி இந்து முன்னணியினர் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்த வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருபிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தததையடுத்து, இந்து முன்னணியினர் மலை மீதுள்ள கோயிலுக்கு சென்று நிலங்களை மீட்க வேண்டி விளக்கு பூஜை செய்தனர். பூஜை முடித்து திரும்பி வரும் போது, இந்துமுன்னணியினருக்கும், எதிர் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. அடிதடியில் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டு, இருதரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து