அரசியல் » அதிமுக 20 பிஜேபி+ 20 கூட்டணி ரெடி ஜனவரி 12,2019 13:50 IST
அதிமுகவுக்கு 20, பாரதிய ஜனதாவுக்கு 20 என்று லோக்சபா சீட்டுகள் பங்கிடப்பட்டு தேர்தல் கூட்டணி முடிவாகி விட்டது. இப்போதைக்கு இந்த தகவலை வெளியிட வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதால் பா ஜ வட்டாரங்கள் மவுனம் காக்கின்றன. அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடும். பா ஜனதா தனது 20 தொகுதிகளில் பா ம க வுக்கு 6, தே மு தி க வுக்கு 4, பச்சமுத்துவின் இ ஜ க வுக்கு 1, கிருஷ்ணசாமியின் பு த க வுக்கு 1, ஈஸ்வரனின் கொ ம தே க வுக்கு 1 பிரித்து கொடுத்துவிட்டு 7 தொகுதிகளில் போட்டியிடும். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் மத்திய அமைச்சர்கள் பியுஷ்கோயல், அருண் ஜேட்லி ஆகியோர் உதவியுடன் அமித் ஷாவிடம் பேசி முதல்வர் ஒப்புதலுடன் முடிவு செய்தார்கள் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
வாசகர் கருத்து