பொது » ஏழைகளுக்கு மாதம் 2,500 மோடி ரெடி ஜனவரி 12,2019 18:22 IST
வறுமை கோட்டுக்கு கீழே வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 2,500 ரூபாய் நிரந்தர வருமானமாக வழங்க பிரதமர் மோடி முடிவு எடுத்திருப்பதாக டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. தினமும் ஒரு அணுகுண்டு வெடிப்போம் என்று பிஜேபி தலைவர்கள் சொன்னதை உண்மையாக்கும் வகையில் மத்திய அரசு ஏழைகள் இட ஒதுக்கீடு, GST வரம்பு உயர்வு என அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மோடி அறிவித்த ஆளுக்கொரு 15 லட்சம் பற்றி மீண்டும் பரவலாக கேள்வி எழுப்பப்படும் நிலையில் அதை முறியடிக்கும் முதல் படியாக நிரந்தர வருவாய் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாத வருமானம் 2,250 ரூபாய்க்கும் கீழே இருந்தால் அவர்கள் வறுமைக்கோடுக்கு கீழே வாழ்வதாக அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது. அதன்படி பார்த்தால் 30 கோடி பேருக்கு மேல் ஏழை என்ற கணக்கில் வருவார்கள். ஏழை பணக்காரன் வேருபாடு பார்க்காமல் எடப்பாடி அரசு எல்லோருக்கும் 1000 கொடுத்த மாதிரி 2,500 க்கும் கடும் போட்டி உருவாக வாய்ப்பிருக்கிறது.
வாசகர் கருத்து