விளையாட்டு » ஐவர் கால்பந்து : தாமஸ் எப்.சி., வெற்றி ஜனவரி 14,2019 17:56 IST
பொங்கல் விழாவை முன்னிட்டு, புலியகுளம் கால்பந்து கழகம் நடத்தும், 'பி.எப்.சி.,' கோப்பைக்கான,மாநில ஐவர் கால்பந்து போட்டி, புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியில் நடந்தது. 14, 16, 18 மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. திங்களன்று நடந்த 14 வயது பிரிவு போட்டியில், ஊட்டி எம்.பி.என்., அணி, ராயல் எப்.சி., அணிகளும் 16 வயது பிரிவில் ஊட்டி ஒய்.சி.எப்.சி., புலியகுளம் எப்.சி., அணிகளும் வெற்றி பெற்றன. 18 வயது பிரிவில், புலியகுளம் எப்.சி., ஆர்.எஸ் புரம் அணிகள் வெற்றி பெற்றன. ஓபன் பிரிவில், தாமஸ் எப்.சி., அணி, எம்.ஆர். எப்.சி., அணிகள் வென்றன.
வாசகர் கருத்து