Advertisement

சம்பவம் » பாபநாசம் பாணியில் இளம்பெண் கொலை பா.ஜ., மாஜி சிக்கினார் ஜனவரி 14,2019 17:00 IST

சம்பவம் » பாபநாசம் பாணியில் இளம்பெண் கொலை பா.ஜ., மாஜி சிக்கினார் ஜனவரி 14,2019 17:00 IST

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் கரோடியா. Jagdish Karotiya 65 வயது நிரம்பியவர். பா.ஜ. கவுன்சிலராக இருந்தபோது ட்விங்கிள் என்ற 22 வயது இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. விளைவு ட்விங்கிள் கர்ப்பம் தரித்தார். ஜெகதீஷ் கலைக்க வைத்தார். அதன்பிறகு ட்விங்கிள் மிரட்ட ஆரம்பித்தார். என்னை 2வது மனைவியாக்கணும்; உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி முறைப்படி குடும்பம் நடத்தணும்னு ஜெகதீஷை ட்விங்கிள் நச்சரித்தார். மானத்தை காற்றில் பறக்க வைத்து விடுவாள் என நினைத்த ஜெகதீஷும், அவரது மூன்று மகன்களும் ட்விங்கிளை கொல்ல திட்டம் போட்டனர். பாபநாசம் படத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொன்று விட்டு அதை மறைக்க புத்திசாலித்தனமான வேலைகளை செய்வார் கமல். பாபநாசத்தின் இந்தி ரீமேக் திரிஷ்யத்தைப் பார்த்து அசந்த ஜெகதீஷ், அதே பாணியில் ட்விங்கிளை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். மறுநாள் விடிந்தது. தேதி: அக்டோபர் 16, 2016. டிவிங்கிளை ஒரு இடத்துக்கு அழைத்தார். மறைந்திருந்த 3 மகன்களும் ட்விங்கிளை கழுத்த நெரிச்சு கொலை செஞ்சாங்க. பாடிய எரிச்சி வீட்டுக்கு பக்கத்துல ஓடும் கால்வாய்ல போட்டுட்டாங்க. கார்ப்பரேஷன் ஊழியரை அழைச்சி தன் வீட்டுல பள்ளம் தொண்ட சொன்னாரு. தன்னோட நாயை கொன்னு அதுல புதச்சு இருக்காங்க. பாபநாசம் படத்துல போலீசை திசை திருப்ப கமல் இப்படித்தான் செய்வாரு. டிவிங்கிள் உயிரோட இருந்தபோதே அவளுக்கும், அப்பாவுக்கும் சண்டை மூட்டிவிட்டாரு. அப்பா மேலயே டிவிங்கிளை வச்சு போலீசில் புகார் கொடுக்க வச்சாரு ஜெகதீஷ். பின்னால யூஸ் ஆகும்னு முன்னாலேயே நினைச்சாரு. அதுமட்டுமில்ல கொலைக்கு முந்தைய நாள் டிவிங்கிள் மொபைல்ல இருந்து ஜெகதீஷ் மகன் அஜய் தன் போனுக்கு வாட்ஸ் ஆப்ல ஒரு மேசேஜ் அனுப்பிக்கிட்டான். ' அப்பாவால ரொம்ப stressஆ இருக்கேன்'னு அந்த மெசேஜில் இருந்தது. அதனால பழி டிவிங்கிள் அப்பா மேல விழும்னு ஜெகதீஷ் செய்த ஐடியா இது. அதோட நிக்கல. டிவிங்கிளுக்கு நிச்சயமான பையனோட ஏரியாவுல டிவிங்களோட மொபைல புதைச்சாங்க. டிவிங்கிள் மொபைலின் லாஸ்ட் லொக்கேஷனை போலீஸ் கண்டுபிடிச்சா, அந்த பையன் மீது கொலைப்பழி விழும்னு நினைச்சாங்க... டிவிங்கிள் கொலை நடந்து 6 மாதத்துக்கு யாருக்கும் ஜெகதீஷ் மீது சந்தேகம் வரலை. ஒருநாள் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், இந்தூர் Regal square ஏரியாவுல டிவிங்கள பார்த்ததா ஜெகதீஷ் சொன்னாரு. ட்விங்கிள் உயிரோட இருக்கறதா சொன்னா போலீஸ் இன்னும் குழம்புவாங்கனு நினைச்சாரு. ஆனா அவரையே போலீஸ் விசாரிச்சாங்க. டிவிங்கிள் மாதிரி ஒரு பொண்ண பார்த்தேன்னு சொல்லி சமாளிச்சிட்டு வந்தாரு. ஆனா போலீசுக்கு சந்தேகம் தீரலை. ஜெகதீஷ் கார் டிரைவர்கிட்ட விசாரிச்சப்ப, அக்டோபர் 16ம்தேதி ஜெகதீஸ் வீட்டுல இருந்து ட்விங்கிள் வெளிய வந்ததை பார்த்தேன்னு சொன்னாரு. இதுக்கிடையில, ட்விங்கிளோட ட்ரஸ், பரேஸ்லெட்டை இன்வெஸ்ட்டிகேஷன் டீம் கண்டுபிடிச்சாங்க. ஆனாலும் போதுமானஆதாரம் இல்லாததால போலீசால ஜெகதீஷ நெருங்க முடியலை. ட்விங்கிள் பெற்றோர் கோர்ட்டுக்கு போனாங்க. ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம் விசாரிக்க துவங்கிச்சு. ஜெகதீஷ், மற்றும் 3 மகன்களிடம் பிரெய்ன் ஃபிங்கர்பிரிண்ட்டிங் முறைப்படி விஞ்ஞான ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது . அப்போது ட்விங்கிளை கொன்றதை ஜெகதீஷ் ஒப்புக் கொண்டார். கொலைக்கு ஜெகதீஷ் கூட்டாளி நீலேஷ் என்ற உதவியது தெரியவந்தது. ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.


play button 02:56 வெப்பக்காத்து ; உப்புத்தண்ணி ; நிலம்போச்சே | Maize, Vegitables Farming | Trichy | Dinamalar

வெப்பக்காத்து ; உப்புத்தண்ணி ; நிலம்போச்சே | Maize, Vegitables Farming | Trichy | Dinamalar

play button 08:36 தர்மபிரபு படக்குழு பேட்டி

தர்மபிரபு படக்குழு பேட்டி

play button 01:33 விளையாட்டுச் செய்திகள் | Sports News 26-06-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 26-06-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:39 குழந்தையை  மாத்திட்டாங்க... புலம்பவிட்ட ஆஸ்பிடல்

குழந்தையை மாத்திட்டாங்க... புலம்பவிட்ட ஆஸ்பிடல்

play button 00:48 நடுரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மக்கார்

நடுரோட்டில் 108 ஆம்புலன்ஸ் மக்கார்

play button 00:42 ஐபோன் போலி பாகங்கள் விற்பனை ஜரூர்

ஐபோன் போலி பாகங்கள் விற்பனை ஜரூர்

play button 04:57 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-06-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 26-06-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:53 2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா? | Cognizant's plea challenging Rs 2,912 crore tax demand

2912 கோடி வரி; காக்னிசன்ட் கட்டுமா? | Cognizant's plea challenging Rs 2,912 crore tax demand

play button 01:59 திருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம்

திருச்செந்தூர் முருகன் வீதி உலாவுக்காக பித்தளை விமானம்

play button 01:38 எண்ணக்கூடிய  தண்ணீர் புகார்கள்

எண்ணக்கூடிய தண்ணீர் புகார்கள்

play button 02:50 இயற்கை விவசாயத்தில் அசத்தும் இன்ஜினியர்

இயற்கை விவசாயத்தில் அசத்தும் இன்ஜினியர்

play button 00:46 மாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி

மாநில கூடைப்பந்து; ஈரோடு அணி வெற்றி

play button 01:30 நார் ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்

நார் ஆலைகள் உற்பத்தி நிறுத்தம்

play button 04:12 2.0 சீனா வெளியீடு 'கேன்சல்'?

2.0 சீனா வெளியீடு 'கேன்சல்'?

play button 01:08 கைவிட்ட காவிரி : கண்ணீரில் காவலர்கள்

கைவிட்ட காவிரி : கண்ணீரில் காவலர்கள்

play button 04:56 'ஜி.பி.எஸ்' கண்காணிப்பில் தண்ணீர் லாரிகள் | Water Lorry | GPS | Madurai Corporation | Dinamalar

'ஜி.பி.எஸ்' கண்காணிப்பில் தண்ணீர் லாரிகள் | Water Lorry | GPS | Madurai Corporation | Dinamalar

play button 02:27 திருப்பூர் இளைஞரை மீட்க  நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர்

திருப்பூர் இளைஞரை மீட்க நடவடிக்கை; சுஷ்மா பாணியில் ஜெய்சங்கர்

play button 05:21 சென்னை மக்களே  கிணற்றை  மூடாதீங்க|ChennaiWater Scarcity|How to save water|Solution for water problem

சென்னை மக்களே கிணற்றை மூடாதீங்க|ChennaiWater Scarcity|How to save water|Solution for water problem

play button 00:45 ஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,

ஒரு மாதத்துக்குப் பின் 'நன்றி' தெரிவித்த என்.ஆர். காங்.,

play button 00:20 மீனம்

மீனம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X