பொது » வேளாண் பல்கலை.,யில் பொங்கல் கொண்டாட்டம் ஜனவரி 15,2019 13:00 IST
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் விழாவுக்கு, 10 ஜோடி மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். சூரியனுக்குப் படையல் வைத்து பொங்கலை, மாடுகளுக்கும் உண்ண கொடுத்தனர். வேளாண் பல்கலையில் உள்ள, பருத்தி, நெல் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பணிபுரியும் விவசாய பண்ணை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவின் ஒரு பகுதியாக, பட்டி மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 திரவியங்கள் நிறப்பப்பட்ட பாத்தியில் பசு மாட்டை மிதிக்க வைத்து, எந்தப் பாத்தியில் மிதிக்கிறதோ அதில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு பசு மஞ்சள் பயிரை மிதித்தது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து