ஆன்மிகம் வீடியோ » திருப்போரூர் கோயிலில் பால்குட பெருவிழா ஜனவரி 16,2019 11:00 IST
சென்னை அருகே உள்ள திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தைத் திருநாளை முன்னிட்டு 28ம் ஆண்டு பால்குட பெருவிழா நடந்தது. 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனை வழிபட்டனர். திருப்போரூர் மலைக்கோயில் கிரிவலப்பாதை மற்றும் நான்கு மாடவீதிகள் வழியாக 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்தபிறகு, முருகனுக்கு பால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து வந்தனர்.
வாசகர் கருத்து