Advertisement

பொது » விடாமல் முயன்றால் வெற்றிதான் ஜனவரி 16,2019 15:00 IST

பொது » விடாமல் முயன்றால் வெற்றிதான் ஜனவரி 16,2019 15:00 IST

ஜீனா மார்ட்டின் அழகான உயரமான 24 வயது பெண். லண்டனில் உள்ள ஹைடு பார்க்கில் Hyde Park சுற்றிக் கொண்டிருந்தார். 2 வாலிபர்கள் பின்னால் தொடர்ந்தனர். பேச்சு கொடுத்து ஃப்ரண்டாக்க முயன்றனர். ஜீனா பிடி கொடுக்கவில்லை. பிறகும் அவர்கள் பின் தொடர்ந்து வம்புக்கு இழுத்தனர். சடாரென்று திரும்பிய ஜீனா எச்சரித்தார். ஒருத்தன் அவருக்கு பதில் சொல்லும்போதே இன்னொருவன் செல்போனை ஜீனாவின் ஸ்கர்ட்டுக்கு கீழே நீட்டி அவரது கீழ் பகுதியை போட்டோ எடுத்தான். ஷாக் ஆனாலும் துரிதமாக செயல்பட்டு அவனது செல்போனை பறித்தார் ஜீனா. ரோந்து போலீசை அழைத்து செல்போனை கொடுத்து வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொன்னார். அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு. ஸ்கர்ட்டுக்கு கீழே செல்போனை நீட்டி அந்தரங்கத்தை போட்டோ எடுப்பது இங்கிலாந்தில் சட்டப்படி குற்றம் இல்லையாம். அதெப்படி என்று ஜீனாவுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. பெண் குளிப்பதை எட்டி பார்ப்பது, உடை மாற்றுவதை ரகசியமாக படம் பிடிப்பது மாதிரியான வக்கிரங்கள் உலகம் முழுக்க நடக்கிறது. பல நாடுகளில் இவை கிரிமினல் குற்றம். சில நாடுகளில் அப்படி இல்லை. இங்கிலாந்தும் அதில் ஒன்று. ஜீனா விடுவதாக இல்லை. தன் அனுபவத்தை பிபிசி வெப்சைட்டில் எழுதினார். பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். “என் கால்களுக்கு இடையில் செல்போனை நீட்டி என் டேஷை போட்டோ எடுத்து சோஷல் மீடியாவில் ஷேர் செய்து ரசிக்கிறார்கள். இதென்ன வக்கிரம்? இதென்ன மிருகத்தனம்? பெண்ணுக்கு அவள் உடல் மீது உரிமை இல்லையா? மானத்தை காப்பாற்ற பொறுப்பு இல்லையா?” என்ற ஜீனாவின் கேள்விகள் மெல்ல மெல்ல நாடு முழுவதும் பரவி ஆதரவை சேகரித்தது. ரயான் வேலன் என்ற வக்கில் நண்பரும் உதவி செய்தார். தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்து சட்டமாக்க பெண் எம்.பி.க்கள் முன்வந்தனர். ஒரு வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு மக்கள் சபையில் மசோதா தாக்கல் ஆனது. ஒரு 75 வயது எம்.பி எழுந்து “ஆட்சேபம்” என்றார். அவ்வளவுதான். மசோதா நிராகரிக்கப்பட்டது. பிரிட்டிஷ் பார்லிமென்டில் சில விசித்திர விதிகள் உண்டு. சனி, ஞாயிறு லீவு என்பதால் வெள்ளிக்கிழமையில் மசோதா வந்தால் விவாதிக்க நேரம் இருக்காது என்பதால் அன்று மதியம் தாண்டி ஏதேனும் மசோதா வந்தால் ஒரே ஒரு எம்.பி ஆட்சேபம் சொன்னாலும் உடனே பணால் என்பது அந்த விதிகளில் ஒன்று. ஆனால் வெளியே இது வேறு மாதிரி பரவியது. பிரதமராக ஒரு பெண் இருந்தும் இப்படியா? என்று பேச்சு வலுத்ததால் பிரதமர் மே தலையிட்டு அரசாங்க மசோதாவாக தாக்கல் செய்ய முன்வந்தார். மக்கள் சபையில் நிறைவேறி, மேல்சபையான பிரபுக்கள் சபையிலும் புதனன்று நிறைவேறியது மசோதா. அப்ஸ்கர்ட்டிங் Upskirting என்று சொல்லப்படுகிற ஸ்கர்ட்டுக்கு கீழே கேமராவை நீட்டி படம் எடுப்பவர்களுக்கு 2 வருடம் ஜெயில் என்கிறது மசோதா. ராணி கையெழுத்து போட்டதும் சட்டம் அமலுக்கு வரும். “சட்டம், அரசியல் இதெல்லாம் பார்த்து யாரும் பயப்பட தேவை இல்லை. அநீதி என்று மனதுக்கு தெரிந்தால் அதற்கு எதிராக குரல் கொடுங்கள்; மக்கள் ஆதரவு கிடைக்கும்; அதன் பிறகு அரசும் இறங்கி வரும்” என்று நண்பரோடு சியர்ஸ் சொல்லி சிரிக்கிறார் ஜீனா.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:22 சிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி

சிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி

play button 01:45 புதுக்கோட்டை கைதிகளின் நேர்மை

புதுக்கோட்டை கைதிகளின் நேர்மை

play button 01:08 பெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

பெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

play button 03:29 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 12-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:57 பந்தங்களை  பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'

பந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'

play button 01:00 ரயில்வே துறை  கைப்பந்து போட்டிகள்

ரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்

play button 00:45 மாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி

play button 05:53 மோடி தொடங்கிய புது புரட்சி

மோடி தொடங்கிய புது புரட்சி

play button 03:41 தள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்

தள்ளிக்கிட்டு போனாலும் ஹெல்மட் போடனும்

play button 02:55 மாடி வீடு  கட்டினால் தெய்வ குற்றம்!

மாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்!

play button 02:46 கன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்

கன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்

play button 02:08 விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-11-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 11-11-2019 | Sports Roundup | Dinamalar

play button 04:39 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 11-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 06:57 சேஷன் ஒரு சகாப்தம்

சேஷன் ஒரு சகாப்தம்

play button 01:24 ரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...

ரஜினிகாந்த் சொல்வது பற்றி கவலையில்லை...

play button 01:34 ஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்

ஜனாதிபதி மாளிகை முன் தர்ணாவில் அமருவேன்

play button 00:41 மாநில கேரம் போட்டி

மாநில கேரம் போட்டி

play button 00:59 ரவுடி வெட்டிக் கொலை

ரவுடி வெட்டிக் கொலை

play button 01:08 500 ஏக்கர் கோயில் நிலம்  ஆக்ரமிப்பு

500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு

play button 00:47 மீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி

மீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X