விளையாட்டு » ஆஸி மண்ணில் இந்தியா இரட்டை சாதனை ஜனவரி 18,2019 18:19 IST
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி மெல்பர்னில் நடந்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 48.4 ஓவரில் 230 ரன்னில் ஆல் அவுட்டானது. ஸ்பின்னர் சாஹல் 6 விக்கெட் சாய்த்தார். எளிதான வெற்றி இலக்குடன் ஆடிய இந்தியா 59 ரன் எடுப்பதற்குள் ரோகித், தவானை இழந்தது. கேப்டன் கோஹ்லி 46 ரன்னில் அவுட். தோனியும், ஜாதவும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். தோனி 87 ரன், ஜாதவ் 61 ரன் அடித்து இறுதிவரை அவுட்டாகாமல் நின்றனர். இந்த வெற்றியின்மூலம் 2க்கு 1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது நாட்டிலேயே இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுவது இதுதான் முதல்முறை. இதே சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதித்திருந்தது. இரண்டு சாதனைகளையும் கோஹ்லி தலைமையிலான அணி படைத்தது இன்னொரு சிறப்பு.
வாசகர் கருத்து