பொது » சயான், மனோஜ் ஜாமீனுக்கு எதிரான மனு ஏற்பு ஜனவரி 18,2019 19:35 IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான, கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 23ல், காவலாளி ஓம்பகதுார், ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில், சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளனர். இந்த வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்டில் நடந்து வருகிறது. இதில், சயான்; வாளையார் மனோஜ் ஆகியோர், டில்லியில் அளித்த பேட்டியில், கோடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமியையும் தொடர்புபடுத்தி கூறியிருந்தனர். இந்நிலையில், இவர்களின் பேட்டியால், சாட்சிகள் அச்சப்பட கூடும்; இதனால், அவர்கள் இருவரின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஊட்டி செசன்ஸ் கோர்டில் மனு தாக்கல் செய்தார். இதனை நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை விசாரணைக்கு எடுத்து கொண்டார். 'ஓரிரு நாட்களில் விசாரணை நடக்கும்,' என, எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து