விளையாட்டு » சீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம் ஜனவரி 19,2019 13:50 IST
அரைஸ் ஸ்டீல் தேசிய சீனியர் ஹாக்கி போட்டி சென்னையில் நடந்து வருகிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் தமிழகம், இந்திய விளையாட்டு ஆணைய அணிகள் மோதின. இரு அணிகளும் தலா 3 கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. தமிழக அணிக்காக சண்முகம், வினோதன், ராயர் கோல் அடித்தனர். ஷீட்அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 5 ஷூட் அவுட் வாய்ப்புகள் தரப்பட்டன. இதில் தமிழகம் 3 கோல்களை போட்டது. இந்திய விளையாட்டு ஆணையத்தால் 2 கோல்களை மட்டுமே போட முடிந்தது. இதன்மூலம் தமிழக அணி 6க்கு 5 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டி ஞாயிறன்று நடக்கிறது.
வாசகர் கருத்து