பொது » ஸ்டான்லியில் நடந்த அவசர திருமணம் ஜனவரி 19,2019 15:55 IST
ன்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சுதேஷ். வெல்டர். ஜனவரி 11ம்தேதி திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில் சுதேஷ் படுகாயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடைக்கு கீழே கால்கள் முழுவதுமாக நசுங்கியதால் இரு கால்களும் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. சுதேஷின் மகன் சதீஷுக்கும், சித்ராவுக்கும் பிப்ரவரி 15ந்தேதி திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர். சுதேஷின் உடல்நிலை மோசமானதால் சதீஷ் - சித்ரா திருமணத்தை உடனே நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். ஸ்டான்லி வளாகத்திலுள்ள விநாயகர் கோயிலில் வெள்ளி இரவு சித்ராவுக்கு சதீஷ் தாலி கட்டினார். பிறகு, சதீஷ் புதுமனைவியுடன் சென்று தந்தை சுதேஷிடம் ஆசிபெற்றார்.
வாசகர் கருத்து