பொது » பத்திரப்பதிவுக்கு லஞ்சம் : பொறுப்பாளரிடம் விசாரணை ஜனவரி 19,2019 00:00 IST
மதுரை மாவட்டம் ஏழுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளர் பணிக்கு வராததால், அவருக்கு அடுத்தநிலையில் உள்ள ராஜ்குமார் என்பவர், பத்திரங்கள் பதிவு செய்து வந்துள்ளார். இவர், ஆவணங்கள் இல்லாமல், பத்திரங்களை பதிவு செய்து தருவதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு, புகார் சென்றது. டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில், எழுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில், போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பதிவுக்காக காத்திருந்தவர்கள், பத்திர எழுத்தர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தினர். 25 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதற்கு, கூடுதலாக, கணக்கில் வராமல் இருந்த 3.50 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். பத்திரபதிவு பொறுப்பாளராக இருந்த ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து