விளையாட்டு » பள்ளிகளுக்கான கேரம் போட்டி ஜனவரி 19,2019 20:30 IST
கிராண்ட்ஸ்லாம் கேரம் அகாடமி சார்பில் பள்ளி அளவிலான கேரம் போட்டி சென்னையில் நடக்கிறது. ஆண்களுக்கான ஆட்டத்தில் 25 பள்ளிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனர். கேடட் cadet பிரிவில் சாய்கிருஷ்ணா 24க்கு 4 என்ற புள்ளி கணக்கில் கார்த்திக்கையும், நரேன் 21க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில் கிஷோரையும் வென்றனர். சப் ஜூனியர் பிரிவில் சஞ்சய் 16க்கு 10 என்ற புள்ளி கணக்கில் கவுதமை வீழ்த்தினார். ஜூனியர் பிரிவில் சதீஷ் 10க்கு 6 என்ற புள்ளி கணக்கில் ஆகாசை வென்றார். இரட்டையா் பிரிவில் ஆகாஷ்- செந்தமிழ் ஜோடி 17க்கு பூஜ்யம் என்ற புள்ளி கணக்கில் பாண்டி பிரசாத் - சதீஷ் ஜோடியை தோற்கடித்தது.
வாசகர் கருத்து