விளையாட்டு » மாநில அளவிலான தடகள போட்டி ஜனவரி 20,2019 00:00 IST
பள்ளி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில், மாநில அளவிலான தடகளப்போட்டிகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதுமிருந்து 720 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆடவர் மற்றும் மகளிர் 14, 16 வயதிற்குட்பட்டோர் என இருபிரிவுகளின்கீழ் 100மீ, 600மீ, 800மீ ஓட்டப்பந்தயம், குண்டுஎறிதல், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கணைகள் பிப்ரவரி 3, 4 ஆம் தேதிகளில், டெல்லி நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில், பங்கேற்கின்றனர். அப்போட்டியில், வெற்றிப்பெறும் மாணவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவர்.
வாசகர் கருத்து