அரசியல் » தனிக்கட்சி துவங்க எனக்கு தகுதி இல்லை ஜனவரி 20,2019 15:39 IST
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோவிலில் தரிசனம் செய்த பின்னர் பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தனிக்கட்சி துவங்கும் அளவுக்கு தனக்கு தகுதி இல்லை என்றும் தான் என்றுமே அதிமுகவின் தொண்டன் தான் என்றும் தெரிவித்தார். தமிழகத்திற்கு வரவேண்டிய 16,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்குவதற்கு மறுக்கிறது என்றும், இதுபோன்று பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்க மறுப்பதால் மத்திய அரசை உரிமையுடன் கேட்டு வருவதாகவும் கூறினார்.
வாசகர் கருத்து