சம்பவம் » விராலிமலை ஜல்லிகட்டு; பார்வையாளர்கள் பலி, தடியடி ஜனவரி 20,2019 00:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெறும் ஜல்லிகட்டை பார்ப்பதற்காக, சொரியம்பட்டியை சேர்ந்த 28 வயது ராமு என்பவர் சென்றிருந்தார். ஜல்லிகட்டு மாடுகள் களத்தில் இருந்து வெளியேறும் இடத்தில் இருந்து வேடிக்கை பார்த்த போது மாடு முட்டி பலியானார். இதே இடத்தில் நின்றிருந்த திருச்சி ஜீயபுரமத்தைச் சேர்ந்த 35 வயதான சதீஷ்குமார் என்பவரும் மாடுமுட்டி பலியானார். மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட 13 பேர் காயம் அடைந்தனர். [ ஜல்லிகட்டில் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து பார்வையிட அனுமதி சீட்டு இருந்தும் 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து கும்பலாக கேலரி நுழைவு வாயிலில் நின்றிருந்தவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
வாசகர் கருத்து