விளையாட்டு » கராத்தே வீரர்களுக்கு கருப்பு 'பெல்ட்' ஜனவரி 20,2019 18:40 IST
மாநில கராத்தே சங்கம் மற்றும் ஜீதோ குக்காய் கராத்தே டூ இந்தியா கோவை பள்ளி சார்பில் கராத்தே வீரர்களுக்கான உயர்நிலை அங்கீகாரத்துக்குரிய 'கருப்பு பெல்ட்' வழங்கும் நிகழ்ச்சி, கோவை ஆவராம்பாளையம் 'கோஇந்தியா' வளாகத்தில் நடந்தது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து 184 வீரர்கள் பங்கேற்றனர். அகிலஇந்திய கராத்தே சங்க தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு கராத்தே சங்க செயலாளர் முத்துராஜ், அகிலஇந்திய ஜீதோ குக்காய் கராத்தே சங்க செயலாளர் சாய் புரூஷ் வீரர்களுக்கு 'பெல்ட்' வழங்கினர். 'கராத்தே' விளையாட்டில், 10 நிலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆறு மாத பயிற்சி தேர்வுக்கு பின்பே, அடுத்தடுத்த நிலைக்கு செல்ல முடியும். இதன் இறுதி நிலையாகத்தான் 'பிளாக் பெல்ட்' வழங்கப்படுகிறது.
வாசகர் கருத்து