பொது » அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்பு தொடங்கியது ஜனவரி 21,2019 20:06 IST
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை அமல்படுத்த அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. யு.கே.ஜி வகுப்புகளை முதல்வரும் துணை முதல்வரும் தொடங்கி வைத்தனர். எழும்பூரில் பத்தே நிமிடங்களில் விழாவை முடித்துக் கொண்டு அமைச்சர்கள் பறந்தபோது அதிகாரிகளும் கூடவே சென்றுவிட்டனர். தமிழகம் முழுவதும் 2,381 அரசு நடுநிலை பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடங்கும்; ஜூன் வரை மாணவர் சேர்க்கை நடக்கும்; பாடத்திட்டம் ஒரு வாரத்தில் இறுதியாகும் என்பதை மட்டும் ஒரு அதிகாரி தெரிவித்தார். சேர்க்கை தகுதி, வயது வரம்பு, வகுப்பு நேரம் போன்ற வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அங்கன்வாடிகள் செயல்படும் பள்ளிகளில் மட்டுமே எல்கேஜி, யு.கே.ஜி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து