சிறப்பு தொகுப்புகள் » இது இருந்தா உங்க டூ வீலரை திருட முடியாது! ஜனவரி 21,2019 20:30 IST
வாகன பெருக்கத்திற்கு ஏற்ப, டூவீலர் திருட்டும் சர்வ சாதாரணமாகிவிட்டது. வகனத்தை பறிகொடுத்துவிட்டு,போலீஸ் ஸ்டேஷனுக்கும், இன்சூரன்ஸ் அலுவலகத்துக்கும் அலைந்தாலும், வாகனம் திரும்ப கிடைப்பதும் சந்தேகமே. அதனால், வாகனத்தை பறிகொடுக்காமல் பாதுகாப்பதே புத்திசாலித்தனம். அதற்கு, ஜி.பி.எஸ்., கருவிகள் பேருதவியாக இருக்கின்றன. இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்திக்கொள்வது இப்போது பரவலாகி வருகிறது. டூவீலரை யாராவது திருட முயன்றாலே, ஜி.பி.எஸ். கருவியில் இருந்து அதன் உரிமையாளரின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியுடன் எச்சரிக்கை அழைப்பு செல்லும். உடனே சுதாரித்துக்கொள்ளலாம். அப்படியும் பைக் திருடு போய்விட்டால், அது எங்கே இருக்கிறது என்பதை கூகுள் மேப் உதவியுடன் லைவ்வாக கண்டறிய முடியும். அத்துடன், மொபைல் மூலமே வாகனத்தை 'லாக்' செய்துவிடமுடியும். மேற்கொண்டு ஸ்டார்ட் ஆகாது. 4,000 முதல் 6,000 ரூபாய் வரையில் இக்கருவிகள் கிடைக்கின்றன. அதை பொருத்திதரும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. ஜி.பி.எஸ்., இருந்தால் உங்கள் வண்டியை இனி யாரும் தொடமுடியாதுதானே!
வாசகர் கருத்து