சம்பவம் » இருசக்கர வாகனம், வேன் மோதல் : 3 பேர் பலி ஜனவரி 23,2019 00:00 IST
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி சரவணன். இவருடன் 11 ம்வகுப்பு மாணவன் ஜோகில், பாலிடெக்னிக் மாணவன் சாஜுவும், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மேக்கா மண்டபம் பகுதியில் இருந்து அழகியமண்டபம் வரும் போது பிலாங்காலை என்ற இடத்தில் எதிரே வந்த வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்தனர். தக்கலை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பலியானவர்கள் உடல்கள், தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
வாசகர் கருத்து