விவசாயம் » தண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள் ஜனவரி 23,2019 00:00 IST
தமிழகத்தின் 50 சதவிகித சின்னவெங்காய தேவையை பூர்த்தி செய்கிறது பெரம்பலூர் மாவட்டம். சத்திரமனை,கீழக்கணவாய், வேலூர், செட்டிகுளம், எசனை உட்பட பல்வேறு பகுதிகளில் 8000 எக்டேரில் பயிரிடப்படுகிறது. பருவமழை பற்றாக்குறையால் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. இதனால் நீரின்றி சின்னவெங்காய பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனர். வயல்களின் தூரத்திற்கேற்ப தண்ணீரின் விலை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. டேங்கர் லாரிகளில் கொண்டுவரும் நீரை கிணற்றில் பாய்ச்சி பின்னர் பயிர்களுக்கு பாய்ச்சுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையோடு, விலை வீழ்ச்சியும் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிலோ 6 ரூபாய்க்கே வியாபாரிகள் வாங்கிச்செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து