சம்பவம் » விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிறுவன் சாவு ஜனவரி 24,2019 00:00 IST
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா - மோகன் தம்பதியின் 17 வயது மகன் முத்து கார்த்திக். திருட்டு வழக்கு சம்பந்தமாக ஜன. 12ம் தேதி எஸ்.எஸ். காலனி போலீசார், விசாரணைக்காக முத்துகார்த்திக்கை அழைத்துச் சென்றுள்ளனர். ஜன. 16ஆம் தேதி விசாரணை முடிந்து விட்டதாக கூறி, காவல் நிலைய ஜாமினில் முத்துப்பாண்டியை வெளியே அனுப்பினர். வீட்டில் ரத்தவாந்தி எடுத்ததால் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துப்பாண்டி, வியாழனன்று இறந்தார். இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மற்றும் போலீசார் தாக்கியதால் தான் முத்துப்பாண்டி இறந்ததாக கூறி, உறவினர்கள் RDO விசாரணை கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து