அரசியல் » குறுக்கு வழியில் வெற்றி பெற பா.ஜ.க., முயற்சி ஜனவரி 25,2019 16:05 IST
புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியில், டெங்கு குறித்தான விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்த பின் முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்தார். தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளே தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைப் பின்பற்றுவதாவும், காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி வாக்கு சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டுமென்பதில் தெளிவாக உள்ளதாக கூறினார். மேலும், பா.ஜ.க., மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
வாசகர் கருத்து