அரசியல் » மோடி வெற்றிக்கு தமிழகம் உதவும் ஜனவரி 30,2019 17:11 IST
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்க தமிழகம் முக்கியபங்கு வகிக்கும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார். பாஜ அரசின் சாதனை அளப்பரியது. காங்கிரஸ் பொய்வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை எதிர்கொள்ள முடியாது என்றார் முன்னதாக, பிப்ரவரி 10ம் தேதி திருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதையொட்டி, அந்நிகழ்ச்சிக்கான கால்கோள் நடும் விழாவில் பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து