பொது » போலி நெல்: விவசாயிகள் புகார் பிப்ரவரி 01,2019 14:27 IST
தாராபுரம் அமராவதி ஆற்றுப்பாசன விவசாயிகள் சிலர் குப்பிச்சிபாளையம் விதைநெல் உற்பத்தி நிறுவனத்திடம் 125 நாட்களில் சாகுபடி செய்யும் விதை நெல்லை வாங்கி பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் 125 நாட்கள் கடந்தும் நெல்லில் கதிர் பிடிக்காமல் கருகியதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் தாராபுரம் துணை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். விதை நிறுவனங்கள் போலி விதை நெல்லை விற்றுள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து