ஆன்மிகம் வீடியோ » கூடுதுறையில் கூடிய மக்கள் பிப்ரவரி 04,2019 17:52 IST
ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் தை அமாவாசையை முன்னிட்டு பலர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். காவிரி, பவானி ஆறு ஒன்று சேரும் கூடுதுறையில் திரளான மக்கள் திரண்டு தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். கூடுதுறையில் புனித நீராடிய அவர்கள், அங்குள்ள சங்கமேஸ்வரர் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து