விளையாட்டு » சிலம்பாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி பிப்ரவரி 04,2019 00:00 IST
ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில் சிலம்பாட்டம் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நீலகிரி சிலம்பாட்ட சங்கத்தின் உறுப்பினர்கள், சிலம்பாட்டத்தின் சுற்று முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடம் சிலம்பாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இச்சங்கம் திட்டமிட்டுள்ளது.
வாசகர் கருத்து