ஆன்மிகம் வீடியோ » மாமல்லபுரத்தில் மஹோதய தீர்த்தவாரி பிப்ரவரி 04,2019 18:00 IST
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு மஹோதய தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தை அமாவாசை, திங்கட்கிழமை, திருவோணம் நட்சத்திரம் ஆகிய மூன்றும் சேர்ந்து வரும் நாளில் மஹோதய தீர்த்தவாரி நடப்பது வழக்கம். விழாவை முன்னிட்டு, கடற்கரையில் பெருமாள் எழுந்தருளும் மஹோற்சவ புனித நீராடல் விழா நடந்தது. அங்கு கருட சேவையில் அருள்பாலித்த ஸ்ரீதலசயன பெருமாள், ஆதிவராக பெருமாள், பூதத்தாழ்வாரை பக்தர்கள் வணங்கினர். பிறகு சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் முடிந்தவுடன் மாமல்லபுரம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
வாசகர் கருத்து