விளையாட்டு » தெலுங்கானா அணி முன்னேற்றம் பிப்ரவரி 07,2019 11:00 IST
கடலூர், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பாரதி விளையாட்டு அரங்கில் 73 ஆவது தேசிய அளவிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் தகுதி சுற்று நடைபெற்றது. சந்தோஷ் டிராபி கோப்பைக்கான போட்டியில் தென் மண்டல மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றன. புதுச்சேரி மற்றும் கேரளா அணிகள் மோதின. 0-0 என்ற கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில், சர்வீசஸ் அணியும் தெலுங்கானா அணியும் விளையாடின. இதில் தெலுங்கானா அணி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.
வாசகர் கருத்து