பொது » பெற்றது ஏன்? பெற்றோர் மீது மகன் வழக்கு பிப்ரவரி 07,2019 13:00 IST
என் சம்மதம் இல்லாமல் என்னை பெற்ற பெற்றோர் மீது வழக்கு தொடர போகிறேன் என்கிறார் மும்பை இளைஞர். ரபேல் சாமுவேல் என்ற அவர், பிறக்கும் ஒவ்வொரு உயிரும் இந்த பூமிக்கு பாரம் என்கிறார். 'அன்டினாட்டலிசம் (Antinatalism) என்ற கொள்கையை பின்பற்றுவதாக சொல்லும் ரபேல், யாரும் குழந்தை பெறக்கூடாது என்கிறார். என் பெற்றோர் தங்கள் சுகத்துக்காவும் மகிழ்ச்சிக்காவும் என்னை பெற்றெடுத்துள்ளனர். யாரோ ஒருவர் சுகம் அனுபவிக்க நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? நான் ஏன் உழைக்க வேண்டும்? என்ற விநோதமான கேள்விகளையும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேள்விகளுக்குகெல்லாம் அவருடைய தந்தையும் சலிக்காமல் பதிலளித்துள்ளார். முன்கூட்டியே குழந்தையிடம் சம்மதம் பெற்று பெற்றெடுக்க முடியும் என்பதை கோர்ட்டில் மகன் நிரூபித்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்கிறார்.
வாசகர் கருத்து