Advertisement

சம்பவம் » கல்லூரி மாணவனை கொலை செய்த நண்பன் கமல் ரசிகனாம் பிப்ரவரி 09,2019 18:41 IST

சம்பவம் » கல்லூரி மாணவனை கொலை செய்த நண்பன் கமல் ரசிகனாம் பிப்ரவரி 09,2019 18:41 IST

இந்த கொலை பற்றி அறிந்திருப்பீர்கள்; ஆனால் வெளியான தகவல்கள் சரியானவை அல்ல. உண்மையில் நடந்தது இதுதான். ஆதம்பாக்கம் சரவணனுக்கு வயது 23. சாய்ராம் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2ஆம் ஆண்டு படித்து வந்தான். வசதியான குடும்பம். சரவணின் ஏரியா நண்பன் தீபன் சக்ரவர்த்தி . வயது 25. டிப்ளமா முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருந்தான். தீபனின் அப்பா பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ரிடையர் ஆன போது 20 லட்சம் கிடைத்தது. பிசினஸ் செய்ய போவதாக சொல்லி அப்பாவிடம் 12 லட்சம் ரூபாயை கறந்த தீபன், பிசினஸ் சம்பந்தமாக பலரை சந்திக்க போவதாக சொல்லி நண்பர்களுடன் ஊட்டி, கோவா, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியும் கந்து வட்டிக்கு கொடுத்தும் 4 லட்சத்தை கரைத்தான். சரவணனுக்கும் போதை பழக்கம் உண்டு. பாக்கெட் மனி போதவில்லை. வீட்டில் அதிகமாக கேட்டால் சந்தேகப்படுவார்கள் என்பதால், தீபனிடம் 1 1/2 லட்சம் வட்டிக்கு வாங்கி செலவு செய்தான். தீபன் தங்கைக்கு திருமணம் முடிவானதும், இன்னமும் பிசினஸ் தொடங்காத தீபனிடம் 12 லட்சத்தை திருப்பி கேட்டார் அப்பா. சீக்கிரம் கொடுத்து விடுவதாக வாக்களித்த தீபன், வட்டிக்கு தன்னிடம் பணம் வாங்கியவர்களை நெருக்கினான். அதில் சரவணனும் அடங்குவான். சரவணன் சில நாட்கள் அவகாசம் கேட்டான். அது முடிந்தும் பணம் வராததால் தீபன் பொறுமை இழந்தான். வீட்டிலும் நெருக்கினார்கள். சரவணனின் பெற்றோர் வசதியானவர்கள்தான்' ஆனால் அவன் கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்பதால் சரவணனை கடத்தி பெற்றோரை மிரட்டி பணத்தை மீட்டு விடலாம் என்று தீபன் முடிவு செய்தான். அந்த யோசனையை அவனது நண்பன்கள் பார்த்திபன், ராஜேஷ் ஆகியோரும் ஆதரித்தனர். 23 வயது ராஜேஷ் தனியார் கம்பெனி ஊழியர். பார்த்திபனுக்கு 37 வயது, லாரி ஓட்டுகிறார். சரவணனை காரில் கடத்தினால் போலீஸ் செக்கிங்கில் மாட்டிகொள்வோம் என்பதால், லாரியில் கடத்தலாம் என்று ஐடியா கொடுத்தது பார்த்திபன். துரதிர்ஷ்டவசமாக கடத்தல் தினத்தில் லாரி எதுவும் கிடைக்கவில்லை. தீபன் உடனே திட்டத்தை மாற்றினான். சரவணனுக்கு போன் போட்டு, போரடிக்குது மச்சான்; கண்டிகைக்கு வா, ஒரு கட்டிங் போடலாம் என்று அழைத்தான். அது ஜனவரி 22. செவ்வாய்கிழமை. காலேஜ்க்கு போவதாக வீட்டில் சொல்லிவிட்டு தீபனை பார்க்க கண்டிகைக்கு சென்றான் சரவணன். அங்கிருந்து கீரப்பாக்கம் குவாரிக்கு சரவணனை அழைத்து சென்றான் தீபன். அங்கு ராஜேஷும் பார்த்திபனும் சரக்குடன் ரெடியாக இருந்தனர். எல்லோரும் குடித்தனர். பேச்சு அங்கு சுற்றி இங்கு சுற்றி தீபனுக்கு சரவணன் தரவேண்டிய பணத்தில் வந்து நின்றது. இவன் உடனே தா என்று கேட்க இப்போது இல்லை என அவன் மறுக்க வார்த்தைகள் தடித்து கைகலப்பாக மாறியது. ஆத்திரம் தலைக்கேறிய தீபன் சரவணனின் கழுத்தில் பிளேடு போட்டான். சரவணன் மயங்கி சரிந்தான். அவன் மேல் மேலும் சில கீறல்களை போட்டு, பெல்ட்டால் கழுத்தை நெறித்தான். சரவணன் கதை முடிந்தது. நண்பர்கள் உதவியுடன் நண்பனின் கை, கால்களை கட்டி உடலோடு பெரிய கல்லை வைத்து சுருட்டி குவாரி தண்ணீரில் வீசிவிட்டு புறப்பட்டான் தீபன். 2 நாளாக மகனை காணவில்லை; செல்போனில் கிடைக்கவில்லை என்று ஆதம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தனர் சரவணனின் பெற்றோர். ஜனவரி 28 ஆம் தேதி கீரப்பாக்கம் கல் குவாரி ஏரியில் சடலம் மிதப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். காயார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். சடலத்தை மீட்ட போலீஸ் சரவணனின் பெற்றோரை வரவழைத்து அது சரவணன்தான் என்பதை உறுதி செய்தனர் . தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் பணி தொடங்கியது. சரவணனின் நண்பர்களிடம் விசாரித்தபோது, ”சரவணன் போனில் இருந்து 26 ம்தேதி மெசேஜ் வந்தது. அவசரமாக 5000 ரூபாய் தேவைப்படுகிறது. அனுப்பிவிடு' என்பது அந்த மெசேஜ்” என்று தன் ஃபோனை காட்டினார் தனராஜ் என்ற நண்பர். அந்த மெசேஜை அனுப்பிய சிம் கார்டை டிரேஸ் செய்தபோது, அது பாண்டிச்சேரியை காட்டியது. ஃபோன் IMEI நம்பர் மற்றும் போன் சிக்னலை டிரேஸ் செய்தபோது ஃபோன் சொந்தக்காரர் சிக்கினார். திருவள்ளூரில் வசிக்கும் ஹரி என்பவர்தான் அது. அவரை விசாரித்தபோது, ”முந்தாநாள்தான் என் மொபைலை மூர் மார்க்கெட்டில் விற்றேன்” என்றார். மூர் மார்க்கெட்டில் அந்த கடையை காட்டினார். ஃபோன் எங்கே என்று கடைக்காரரை விசாரித்தபோது, 500 ரூபாய்க்கு ஒரு வாலிபன் வாங்கிச் சென்றதாக கடைக்காரர் சொன்னார். கடை அருகே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போட்டு காட்டினர் போலீசார். 500 ரூபாய்க்கு வாங்கி சென்றவன் தீபந்தான் என்று கடைக்காரர் அடையாளம் காட்டினார். தீபனை பிடித்து முறைப்படி விசாரித்தனர். ”செகண்ட் ஹாண்ட் மொபைல் வாங்கி அதில் சரவணனின் சிம்மை போட்டு யாராவது ஒரு நண்பனுக்கு மெசேஜ் அனுப்பினால் சரவணன் உயிருடன் இருப்பதாக நம்புவார்கள் என்பதால் அப்படி செய்தேன்” என்றான் தீபன். எங்கிருந்து இந்த ஐடியா உதித்தது? என்று போலீஸ் கேட்டதற்கு, “பாபனாசம் படத்தில் கமல் செய்வதை பார்த்து இந்த ஐடியா தோன்றியது” என்றான் தீபன். கொலையில் தீபனுக்கு உதவி செய்த ராஜேஷ், பார்த்திபனையும் கைது செய்தனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:39 ஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா

ஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா

play button 00:45 போக்சோவில் 2 பேர் கைது

போக்சோவில் 2 பேர் கைது

play button 00:40 ஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி

ஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி

play button 01:53 மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்

மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்

play button 00:39 திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா

திருவள்ளூர் வீரராகவர் கோயில் தேர் திருவிழா

play button 01:13 சென்னையில் மாநில அளவு  தடகள போட்டிகள்

சென்னையில் மாநில அளவு தடகள போட்டிகள்

play button 00:43 300 கிலோ புஷ்ப யாகம்

300 கிலோ புஷ்ப யாகம்

play button 00:49 திருச்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொலை

திருச்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொலை

play button 02:47 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 28-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 28-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 09:42 விஜய்சேதுபதி எனக்கு சொன்ன அறிவுரை

விஜய்சேதுபதி எனக்கு சொன்ன அறிவுரை

play button 00:34 பூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா

பூர்வாங்க பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா

play button 02:24 ஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி

ஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி

play button 00:37 சிறுவனை கொன்ற சித்தப்பாவுக்கு ஆயுள்

சிறுவனை கொன்ற சித்தப்பாவுக்கு ஆயுள்

play button 01:30 விளையாட்டுச் செய்திகள் | Sports News 27-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 27-01-2020 | Sports Roundup | Dinamalar

play button 03:02 டியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்

டியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்

play button 00:39 எர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்

எர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்

play button 05:38 சி.ஏ.ஏ.,  முஸ்லீம்களுக்கு எதிரானதா?

சி.ஏ.ஏ., முஸ்லீம்களுக்கு எதிரானதா?

play button 13:40 ரஜினியால்  திமுக அழியும்| S. Ve. Shekher Exclusive Interview | Dinamalar

ரஜினியால் திமுக அழியும்| S. Ve. Shekher Exclusive Interview | Dinamalar

play button 01:15 விருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு

விருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு

play button 05:05 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 27-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 27-01-2020 | Short News Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X