சம்பவம் » கும்பாபிஷேகத்தில் மோதல் பிப்ரவரி 10,2019 18:00 IST
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுாரில் ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அதே ஊரைச்சேர்ந்த காலனிப்பகுதியை சேர்ந்தவர்கள் தட்டு வரிசை மற்றும் மூன்று பவுன் தங்க அட்டிகை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அப்போது ஊர் பெரியோர்கள் அவர்களை வரவேற்றவேலையில், ஊர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் காலனிப்பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் உள்ளே வரக்கூடாது என கோவில் முகப்பில் நின்றுக்கொண்டு தகராறு செய்தனர். இதனால் கோப மடைந்த காலனிப்பகுதியை சேர்ந்தவர்கள் மணலுார் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். ஆங்காங்கே இருகோஷ்டிகளுக்கிடையே தகராறும் ஏற்பட்டது. தகராறு உச்சகட்டத்தை எட்டியதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். பின்பு இரு சமூகத்தினைரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
வாசகர் கருத்து