விளையாட்டு » டி- 20 கிரிக்கெட்: யு.ஐ.டி., வெற்றி பிப்ரவரி 12,2019 18:20 IST
கோவை மாவட்ட அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகள் சார்பில், 'கோவை டைஸ்' டி-20 கிரிக்கெட் போட்டி குனியமுத்துார், ஸ்ரீகிருஷ்ணா இன்ஜினியரிங் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது முதலில் விளையாடிய யு.ஐ.டி., அணி, 20 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 167 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கே.ஐ.டி., அணி, 20 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 156 ரன் மட்டுமே எடுத்தது. யு.ஐ.டி., அணி, 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்த போட்டியில், எஸ்.வி.எஸ்., கல்லுாரி 12 ரன்கள் வித்தியாசத்தில் கதிர் கல்லூரியை வீழ்த்தியது.
வாசகர் கருத்து