Advertisement

சிறப்பு தொகுப்புகள் » பழி தீர்க்குமா இந்தியா பிப்ரவரி 15,2019 11:00 IST

சிறப்பு தொகுப்புகள் » பழி தீர்க்குமா இந்தியா பிப்ரவரி 15,2019 11:00 IST

காஷ்மீரில் 44 வீரர்கள வெடிகுண்டுக்கு பலி கொடுத்த இந்தியா சோகத்துலயும் கோபத்துலயும் தவிக்குது. இப்டி ஒரே நால்ல 40 வீரர்களுக்கு மேல பலியானது போன 30 வருசத்துல நடந்ததே கிடையாது. நாங்கதான் இத செஞ்சோம்னு பாகிஸ்தான்ல உள்ள ஜெம் அல்லது ஜெய்ஷ்—இ முஹம்மது ங்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏத்துகிட்டு பெருமையா அத அறிவிக்கவும் செஞ்சிருக்கு. இந்த அமைப்போட தலைவன் பேரு மசூத் அசார். இவன் பாகிஸ்தான்ல இருந்துகிட்டு அந்த நாட்டோட ராணுவத்ல உள்ள உளவு பிரிவான I S I உதவியோட காஷ்மீர்ல நாசவேலைகள செஞ்சுகிட்டு இருக்கான். காஷ்மீர் மாநிலத்த இந்தியால இருந்து பிரிச்சு பாகிஸ்தானோட சேக்கணும், அதான் இவனோட கொள்கை. இந்தியாவோட நேரா மோதி அத சாதிக்க முடியாது, அதனால மவுலானா மசூத் அசார் மூலமா நடந்தா சரின்னு பாகிஸ்தான் ராணுவம் அவனுக்கு ஃபுல் சப்போட். அந்த நாட்டுல மக்கள் தேர்ந்து எடுக்ற அரசுக்கு ராணுவத்த கன்ட்ரோல்ல வச்சுக்க அதிகாரம் கிடையாது. மாறா, ராணுவம் போட்ற மியூசிக்குதான் அரசு டான்ஸ் ஆடணும். இதுவரைக்கும் இந்தியால நடந்த படுமோசமான பயங்கரவாத தாக்குதல் எல்லாமே அசாரோட ஜெய்ஷ் கைவரிசதான். 2001 ல நம்ம பார்லிமென் ட அட்டாக் பண்ணி ரெண்டு நாட்டையும் போர் விளிம்புக்கு இழுத்துவிட்டான். 2016 ல பதான்கோட் விமான படை தளத்துல நடத்தின அட்டாக்ல 7 வீரர்கள் பலி ஆனாங்க. அதே வருசம் செப்டம்பர்ல ஊரி கேம்ப்ல நடந்த அட்டாக்ல 20 வீரர்கள் அநியாயமா மரணம் அடைஞ்சாங்க. அதுக்கு பழி வாங்கதான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பாகிஸ்தான் எல்லைக்குள்ள் இருந்த சில முகாம்கள நம்ம ராணுவம் அழிச்சுது. கார்ல குண்டுகள் நிரப்பி நம்ம ராணுவ முகாம்கள் அல்லது வாகனங்கள் மேல மோதவிட்டு வெடிக்க வைக்ற சூயிசைட் அட்டாக் அசாருக்கு ரொம்ப இஷ்டமானது. 2000 த்துலயே அபாக் அகமதுங்ற 17 வயசு ஸ்கூல் பாய மாருதி கார் ஓட்ட வச்சு ராணுவ தலைமையகத்துக்கு அனுப்பி வச்சான் அசார். பையன் நடுக்கத்தோட ஓட்னதுல முகாமோட கேட்லயே வெடிச்சிருச்சு கார். ஜெய்ஷ் அமைப்போட பேரு உலகத்துக்கு முதல் தடவையா தெரிஞ்சது அந்த அட்டாக்காலதான். அதுக்கு முந்தின வர்சம்தான் காந்தகாருக்கு இந்திய விமானத்த கடத்திட்டு போய் பயணிகள விடுவிக்கணும்னா இந்திய ஜெயில்ல இருந்த மவுலானா அசார விடுதல செய்யணும்னு கேட்டாங்க தீவிரவாதிகள். வாஜ்பாய் அரசும் வேற வழி இல்லாம அசார விட்டுது. காஷ்மீர்ல அதிகமான ராணுவ வீரர்கள் இருக்காங்க பயங்கரவாதத்த ஒடுக்கணும்னு அவங்க கெடுபிடி காட்றாங்க அப்ப சில அத்துமீறல்கள் நடக்கதான் செய்யுது. அந்த சம்பவங்கள ஊதி பெருசாக்கி சின்ன பசங்கள மதத்தையும் கடவுளையும் காட்டி மூளை சலவை செஞ்சு பயங்கரவாதியா மாத்றது அசாரோட ஸ்பெஷாலிட்டி. அவன உலக பயங்கரவாதிகள் லிஸ்ட்ல சேக்கணும்னு ரொம்ப வருசமா ஐ நா சபைல இந்தியா கத்திகிட்டு இருக்கு. ஆனா, பாகிஸ்தான செல்லநாயா கொஞ்சிகிட்டு இருக்ற சீனா அதுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையா இருக்கு. ஐ நா செக்யூரிட்டி கவுன்சில்ல சீனா ஒரு நிரந்தர உறுப்பினர். அந்த அந்தஸ்து இருந்தா வீட்டோ ந்னு ஒரு பவர் உண்டு. அத பயன்படுத்தி எந்த தீர்மானத்தையும் ரத்து செய்யலாம். அப்டிதான் இன்னி வரைக்கும் சீனா செஞ்சுகிட்டு வருது. இப்ப நடந்திருக்ற கொடூரமான அட்டாக்குக்கு பாகிஸ்தான நாம பழி வாங்கியே ஆகணும்னு நாடு பூரா ஜனங்க மட்டும் இல்லாம ரிட்டயர்டு ராணுவ அதிகாரிகளும் கொதிக்கிறாங்க. சி ஆர் பி எஃப் லயும் ராணுவத்துலயும் ஜவான்கள் செம காண்ட்ல இருக்காங்க. அதனால ஏதாவது செஞ்சே ஆகணும்ங்ற நெருக்கடில இருக்கு இந்தியா. முதல் கட்டமா பாகிஸ்தானோட வச்சிருந்த சிறப்பு பொருளாதார உறவ துண்டிச்சிருக்கு அரசு. அடுத்த கட்டமா என்ன செய்றதுனு மோடி தலைமைல அவசரமா அமைச்சர்வை கூடி பேசிட்டு இருக்கு. பாகிஸ்தானுக்கு போகாதீங்கன்னு அமெரிக்கா தன்னோட மக்களுக்கு அவசர வார்னிங் குடுத்திருக்கு. பாகிஸ்தான் ராணுவத்த அவங்க அரசாங்கம் அலெர்ட் பண்ணிருக்கு. நினைச்ச உடனே ஒரு நாடு இன்னொரு நாட்டு மேல போர் தொடுக்ற மாதிரியான சூழ்நிலை இப்ப மாறிடுச்சு. ஆனா, லிமிட்டட் வார்னு சொல்ற குறுகிய கால யுத்தம் உருவாக சான்ஸ் இருக்குனு தோணுது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்னு சொல்ற துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தான்ல உள்ள தீவிரவாத முகாம்கள தாக்கி அழிக்கிற திட்டமும் நம்ம ராணுவத்துகிட்ட இருக்கு. இந்தியா அட்டாக் பண்ணா சீனா எங்களுக்கு சப்போட்டா போர்ல குதிக்கும்; அதோட இந்தியா அதோ கதிதான்னு பாகிஸ்தான் பூச்சாண்டி காட்டிகிட்டு இருக்கு. சீனா அப்டில்லாம் நேரடியா போர்ல குதிக்குமாங்றது டவுட்டுதான். ஆனா, வடக்கு, வட கிழக்கு எல்லைகள்ல தன்னோட ராணுவத்த கொஞ்ச தூரம் ஊடுருவ வச்சு நம்ம கவனத்தயும் பலத்தையும் திசைதிருப்பி வீக்காக்க சீனாவால ஈசியா முடியும். ஐ நா சபை, வல்லரசுகள் எல்லாம் வேடிக்க பாக்கதான் முடியும். இப்பவே, பாகிஸ்தான அட்டாக் பண்ணாதீங்க; அவன்கிட்ட அணுகுண்டுகள் இருக்கு; ஏடாகூடமா எதையாச்சும் செஞ்சு வைப்பானுங்க; அப்புறம் தெற்கு ஆசியா மொத்தமா சீரழிஞ்சிரும்னு வல்லரசுகள் அமெரிக்கா, ரஷ்யால்லாம் தொடர்ந்து இந்தியாவ அட்வைஸ் பண்ணிட்டே இருக்கு. போர் வர்ற மாதிரி சூழ்நிலை உண்டாச்சுன்னா இந்தியா பூராவும் மக்கள் அட்சிச்சுக்றத நிறுத்திட்டு அரசாங்கத்துக்கு பக்க பலமா ஒண்ணு சேந்துருவாங்க. இப்ப எதிர்க்கட்சிகள் அந்த நிலைமைக்குதான் தள்ளப்பட்ருக்கு. தேர்தல் நேரத்துல இதென்னடா சோதனை.. அப்டீனு நொந்துகிட்டே அரசுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்கு காங்கிரஸ். அட்லீஸ்ட் அசார அரெஸ்ட் பண்ற மாதிரி ஒரு ட்ராமா போட்டாதான் இந்தியாவோட கோபத்துல இருந்து பாகிஸ்தான் தப்ப முடியும். பிரதமர் இம்ரான் கானுக்கு இது வித்யாசமான டெஸ்ட். எப்டி ஆட போறார்னு பாப்போம்.


play button 00:34 மிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்

மிஷின் கோளாறு மெட்ரோவில் இலவச பயணம்

play button 00:49 பொள்ளாச்சியில் அவதரித்த  'அத்திவரதர்'

பொள்ளாச்சியில் அவதரித்த 'அத்திவரதர்'

play button 01:04 உசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து

உசிலம்பட்டி குறுவட்ட கபடி, கால்பந்து

play button 01:18 திருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு

திருச்சி நீதிமன்றத்துக்கு நூறு வயசு

play button 01:20 ஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்

ஆசிய சாதனை விழிப்புணர்வு மாரத்தான்

play button 00:28 பழநியில் ஆடி லட்சார்ச்சனை வெள்ளித்தேரோட்டம்

பழநியில் ஆடி லட்சார்ச்சனை வெள்ளித்தேரோட்டம்

play button 01:36 தாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்

தாக்குதலுக்கு சதி; காஷ்மீரில் ராணுவம் அலர்ட்

play button 02:55 நீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்

நீருக்குள் வைக்க அத்திவரதருக்கு செய்யப்படும் சம்பிரதாயங்கள்

play button 03:02 ப்ளீஸ் ஷேர் பண்ணாதீங்க!

ப்ளீஸ் ஷேர் பண்ணாதீங்க!

play button 04:58 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-08-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-08-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:20 மீனம்

மீனம்

play button 00:16 கும்பம்

கும்பம்

play button 00:18 மகரம்

மகரம்

play button 00:20 தனுசு

தனுசு

play button 00:20 விருச்சிகம்

விருச்சிகம்

play button 00:18 துலாம்

துலாம்

play button 00:20 கன்னி

கன்னி

play button 00:19 சிம்மம்

சிம்மம்

play button 00:16 கடகம்

கடகம்

play button 00:17 மிதுனம்

மிதுனம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X